கோவை மதுக்கரை சுந்தராபுரம் ரோட்டை சேர்ந்தவர்செல்வகுமார். இவரது மனைவி வசந்தகுமாரி (வயது 41)இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் (வயது 17) ஸ்ரீநிதி (வயது 15) ஆகியோருடன் அங்குள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.இவரது வீட்டிற்கு அருகில் பேச்சி முத்து (வயது 64 )என்பவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார்.இவரது சொந்த ஊர் மதுக்கரைப்பக்கம் உள்ள அரிசிபாளையம்,இவருக்கும் வசந்தகுமாரிக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் வசந்தகுமாரி வேறு சில நபர்களுடன் போனில் பேசி வந்தார். இதை பேச்சிமுத்து கண்டித்து உள்ளார்.வசந்தகுமாரி கேட்கவில்லை. இந்த நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பேச்சி முத்து அங்கு கிடந்த கட்டையால் வசந்தகுமாரியை தலையில் அடித்தார். மேலும் அரிவாளால் பல தடவை வெட்டி உள்ளார் .சம்பவ இடத்தில் வசந்தகுமாரி உயிரிழந்தார்.இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளகாதலன் பேச்சிமுத்துவை கைது செய்தனர்.அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0