சிறுமுகையில் பணம் வைத்து சீட்டாட்டம். 7 பேர் கைது

கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் பின்புறம் சிலர் பணம்வைத்து சீட்டு விளையாடுவதாக சிறுமுகை போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் சித்ரா அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்த நாகராஜன் (வயது 65) ரெயான் நகரை சேர்ந்த கண்ணன் ( வயது 55) திருவள்ளூர் நகர் ஆறுமுகம் (வயது 57) ஜீவா நகர் முருகன் ( வயது 43) லெனின் வீதி செல்வராஜ் ( வயது51) சின்னாம்பாளையம் செந்தில்குமார் ( வயது51) அண்ணாநகர் ராமானுஜம் ( வயது 60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.