கோவை டி.கே.மார்க்கெட் அருகே போக்குவரத்து போலீசாரை கண்டித்து வியாபாரிகள் திடீர்ரோடு மறியல்

கோவை ராஜவீதி பகுதியில் டி. கே .மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வருகிறார்கள்.இந்த மார்க்கெட் இருக்கும் பகுதியில் தென்- வடல் ரோடு உள்ளது. அந்த சாலையின் இரு புறத்திலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தினர் .பின்னர் ஒரு பகுதியில் மட்டும் இருசக்கர வாகனங்களை நிறுத்துமாறு கூறிவிட்டு வாகனங்களை நிறுத்த எல்லைக்கோடும் போடப்பட்டது .இந்த நிலையில் அந்த சாலையில் 200 க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.இந்த நிலையில் நேற்று அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அந்த வாகனங்களுக்கு திடீரென்று சங்கிலி போட்டு பூட்டினர். இதை அறிந்த அந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள்,பொதுமக்கள் ராஜவீதியில் திரண்டனர் . பின்னர் அவர்கள்போக்குவரத்து போலீசாரின் இந்த கெடுபிடியை கண்டித்து திடீர்ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .அதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள்மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.பின்னர் போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு போட்ட சங்கிலி பூட்டுகளை அவிழ்த்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கூறியதாவது:- போக்குவரத்து போலீசார் சாலையின் ஒரு புறத்தில் மட்டும் இருசக்கர வாகனங்களை நிறுத்துமாறு கூறினார்கள். அதன்படி தான் நிறுத்தப்பட்டது. ஆனால் கடை உரிமையாளர்கள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் கூறி இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டு போட்டனர்.போலீசார்தான் சாலையின் ஒரு புறத்தில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்று கூறிவிட்டு , அதன்படியே நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு போட்டால் அதை ஏற்க முடியாது.வியாபாரிகளிடம் போக்குவரத்து போலீசார் கெடுபிடி செய்கிறார்கள்.. போலீசாரின் இந்தகெடுபிடியை கண்டுபிடித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். .இந்த பிரச்சனை மீண்டும் தொடரக்கூடாது. உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும். .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..