ரூ,5 லட்சம் – கார் வரதட்சணையாக கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் அதிகாரி உட்பட 4 பேர் மீது வழக்கு .

கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷினி (வயது 26) இவரது கணவர் அபிலாஷ் (வயது 29) இவர்களுக்கு 27-1 -20 22 அன்று திருமணம் நடந்தது திருமணத்தின் போது 73 பவுன் நகைகளும், ரூ. 15 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக வழங்கப்பட்டது.கணவர் தனியார் வங்கியில்உதவி மேலாளராக பார்த்து வருகிறார்.திருமணம் முடிந்து 3 மாதத்தில் மனைவி நடத்தையில்கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கணவர் அபிலாஷ், அவரது தாயார் ரேணுகா வயது 57 தந்தை ஜெயப்பிரகாஷ் ( வயது 62) தங்கை சுபிஷா (வயது 22) ஆகியோர்சேர்ந்து ரோஷினிடம் ரூ 5லட்சமும் (காரும் வாங்கி வருமாறு கூறி மிரட்டல் விடுத்தார்களாம்.இது குறித்து ரோஷினி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் கணவர் அபிலாஷ் மாமியார் ரேணுகா, மாமனார் ஜெயபிரகாஷ்,நாத்தனார் சுபிக்ஷா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் வரதட்சனை கொடுமை உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.