கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் இருபாலர் கல்லூரி முப்பெரும் விழா

நுண்கலை மன்றம் சார்பில் கல்லூரியின் ஆண்டு விழா விளையாட்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நிகழ்வாக காலை 10 மணிக்கு விளையாட்டு விழா தொடங்கியது. கல்லூரியின் முதல்வர்.ஆ. மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். கல்லூரியின் அறங்காவலர் திரு. கே.ஆர்.கவியரசு அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கல்லூரியின் துணை முதல்வர்.முனைவர்.சி.நஞ்சப்பா அவர்கள் விழாவில் கலந்து கொண்டார் இவ் விழாவில் காலை 10 மணிக்கு இந்திய திருநாட்டின் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்தனர். பின்பு சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என்று வர்ணங்கள் வாயிலாக மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர். மேலும் ஆறு மாணவர்கள் கொண்ட குழு கல்லூரியில் ஒலிம்பிக்ஜோதி ஏற்றி வைத்தனர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் கவியரசு அவர்களின் உரையில் இந்தியா அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் நமது கல்லூரியின் சார்பில் கலந்து கொண்டு பெரும் வெற்றியை பெற வேண்டும் என்றும் நமது உறுப்புக் கல்லூரியான பாரா மெடிக்கல் கல்லூரியை சார்ந்த மாணவர்கள் இந்திய அளவில் நடைபெற்ற கால்பந்தில் பெற்ற வெற்றியினை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 4*100 தொடர் ஓட்டம், கராத்தே, கம்பு சுற்றுதல் என அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இதன் இரண்டாம் நிகழ்வாக மாலை 5 மணி அளவில் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா துவங்கியது. இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன், கல்லூரியின் தலைவர் பி. வெங்கடாசலம், கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கௌதம், அறங்காவலர் கவியரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் ஆண்டு விழா, உலக மகளிர் தின விழாவின் முதல் நிகழ்வாக கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ.மோகனசுந்தரம் கல்லூரியின்செய்தி மடல், கடந்த ஒரு வருட கால கல்லூரியின் செயல்பாடுகள் குறித்த மடலினை சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் வெளியிட்டார். மேலும் துறைவாரியாக கடந்த ஒரு வருடங்கள் நடைபெற்ற அனைத்து செய்திகளையும் தெரிவித்தார். இதன் பின் கல்லூரியின் செயலாளர்.கே.சி. கருப்பணன் அவர்களின் உரையில் மாணவ மாணவிகளின் ஒழுக்க நடைமுறைகள், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேலை வாய்ப்புகள் பற்றி மிக அழகாக தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் லவ்லினா லிட்டில் பிளவர் அவர்கள் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார் என்றும், ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருப்பார் என்றும், ஆண்களுக்கு பெண் சரி சமம் என்றும் பேசினார். தொழ்ல்நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் பிறப்பு விகிதத்தில் ஆணுக்கு நிகர் பெண்கள் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவிட்டார். மேலும் உலக அளவில் பெண்களின் நிலை பற்றிய செய்திகளை தெரிவித்து மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார். மேலும் விளையாட்டு போட்டிகள், பட்ட வகுப்புகள் வாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் புள்ளி அடிப்படையில் முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை சிவப்பு நிற குழு மாணவர்கள் பெற்றனர். மேலும் பாரம்பரிய நடனக் கலைகளான கம்பத்து ஆட்டம், யோகாசனம், கம்பு சுற்றுதல், சிவன் ராத்திரியை முன்னிட்டு சிவன் மற்றும் முருகர் வேடத்தில் கல்லூரி மாணவர்கள் மாணவ மாணவிகளுக்கு அருள் பாலித்தனர். மாணவ மாணவிகளின் பாடல்கள் பாடுதல், நடன நாட்டிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், கல்லூரியின் ஆசிரிய ஆசிரியைகள், துறை தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவினை நுண்கலை மன்ற ஆசிரியர் பொறுப்பாளர் முனைவர் சிவகுரு விக்னேஷ், சவிதா, சதீஷ், சுரேஷ்குமார், அம்ருதா, கவிதா, ஸ்ரீதர், சௌமியன், மதன் குமார் மற்றும் நுண்கலை மன்ற மாணவ மாணவிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இறுதியாக நன்றியுரை கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா அவர்கள் வழங்கினார்.
முப்பெரும் விழா இனிதே நிறைவுற்றது.