கவுண்டம்பாளையத்தில் 2 வீடுகளில் நகை திருட்டு

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 37) தச்சு தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான திண்டுக்கல் சென்றிருந்தார்.நேற்று அவரது வீட்டின் உரிமையாளர் ரமேஷ் குமாருக்கு போன் செய்து வீடு திறந்து கிடப்பதாக கூறினார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 36 கிராம் தங்க நகைகளை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ரமேஷ் குமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.இதே போலகோவை கவுண்டம்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமரேசன் ( வயது 31) போட்டோகிராபர்.கடந்து 8-ந்தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது யாரோ வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 4 கிராம் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து குமரேசன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.