கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் ஜெகநாதன் .இவரது மனைவி ரம்யா (வயது 42) இவர் பொங்காளியூர் பகுதியில் மேஜை – நாற்காலி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 8-ந் தேதி இரவில் இவரது தொழிற்சாலையில் இருந்து திடீரென்று தீப்பிடித்தது. இதில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு படையினர்விரைந்து சென்றுதீயை அணைத்தனர். சேதமதிப்பு ரூ 30 லட்சம் இருக்கும் .தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை இது குறித்து ரம்யா வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0