கார் -டேங்கர் லாரி மோதல். வக்கீல் பரிதாப சாவு.

பொள்ளாச்சி பக்கம் உள்ளம் மாக்கினாம்பட்டி, சக்திநகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 48) வழக்கறிஞர் .இவர் நேற்று கொச்சி – சேலம் ரோட்டில் கார் ஓட்டி சென்று கொண்டிருந்தார். செட்டிபாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜெ .ஜெ .நகர் பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக செளை டேங்கர் லாரிஇண்டிகேட்டர் விளக்கு எதுவும்போடாமல் திடீரென்று நின்றது.அப்போது பின்னால் இருந்து வந்த இவரது கார் லாரி மீதுமீது மோதியது .இதில்கார் நொறுங்கியது. தியாகராஜன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து இவரது மனைவி மகேஸ்வரி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாங்கர்லாரி டிரைவர் சுரேந்தர் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும்விசாரணை நடந்து வருகிறது.