தேர்தல்பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி.மகேஷ் குமார் ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள் .இதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சென்னையில் கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் தேர்தல் கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது .இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை மேற்கு மண்டலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தலைமை தாங்கினார் .இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. . பவானீஸ்வரி, கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் திருப்பூர் , ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்புகுறித்தும்குறித்தும், கடந்த சட்டமன்ற தேர்தல் போது மோதல் நடைபெற்ற இடங்கள் அங்கு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.