தென்னை மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள வெம்மாண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர் ( வயது 32)தென்னை மரம் ஏறும் தொழிலாளி. நேற்று சின்ன வீரம்பாளையத்தில் உள்ள ரங்கராஜ் என்பவரதுதோட்டத்தில்தென்னை மரம்ஏறினார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இதுகுறித்து  அவரது மனைவி மைதிலி காரமடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.