திருச்சி பத்திரிகையாளர்களுக்கு அப்போலோ மருத்துவமனையில் உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி.

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருச்சியில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வரவழைத்து மனிதர்களின் அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி குறித்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு மூத்த இருதய நோயின் சிறப்பு டாக்டர் காதர் சாகிப் தலைமை தாங்கி பத்திரிகையாளர்களிடம் சக பத்திரிகையாளருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ திடீரென்று இருதய வலி ஏற்பட்டால் அதை எப்படி முதலுதவி செய்து எதிர்கொள்ள வேண்டும் என்ற பயிற்சியை செய்து காண்பித்து இது பற்றி பத்திரிகையாளர்களிடம் கூறும்போது ஒருவருக்கு இதய பாதிப்பு ஏற்படும் பொழுது மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் நிறுத்தப்படும் உடனே அவருக்கு சிபிஆர் கொடுக்கப்பட்டால் மூளை சாவு அடைவதை தடுக்க முடியும் என்றார் அவசர சிகிச்சை டாக்டர் ஸ்டீபன் பிரகாஷ் அருள் தாஸ் கூறுகையில் அடிப்படை உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி சுகாதார நிறுவனங்களுக்காக மட்டுமல்ல சிபிஆர் முறையில் எவ்வாறு செய்வது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இதன் மூலம் இதய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி விரைவாக கிடைக்கும் என்றார் இதில் மருத்துவமனை இணைத்துணை தலைவர் மற்றும் பிரிவு தலைவர் ஜெயராமன் மருத்துவ நிர்வாகி டாக்டர் சிவம் செயல்பாட்டு புது மேலாளர் சங்கீத் சந்தைப்படுத்துதல் முதன்மை மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதில் ஏராளமான பத்திரிகையாளர் கலந்து கொண்டு டாக்டர்களின் ஆலோசனை கேட்டு பயிற்சியும் செய்து காண்பித்து இது நல்ல ஒரு திட்டம் என்று பத்திரிகையாளர்கள் அப்போலோ ஆஸ்பத்திரி டாக்டர்களை பாராட்டினர். திருச்சி செய்தியாளர் H. பஷீர்