நீலகிரி மாவட்டம், உதகை சாதிமஹால் பகுதியில் பொதுபணித்துறை சார்பில்
ரூ.11.86 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலர் குடியிருப்பு
(50 எண்கள்) கட்டடத்தினை தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்,
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள்
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து, பார்வையிட்டார், இதுபோன்ற பல நல்ல திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கின்ற மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களுக்கு அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு
துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,6 அரசு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.இவ்விழாவில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த வருடம் நேரடியாக வருகை புரிந்து, உதகையை கண்டறிந்து கட்டமைத்ததிரு.ஜான் சல்லீவன் அவர்களின் பெருமையை சேர்க்கும் வகையில் திருவுருச்சிலனை திறந்து வைத்தார்கள், அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையின் சார்பில் கோத்தகிரியில் அரசு பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்ட ரூ.5.22 கோடி மதிப்பீட்டில் கட்டபட்டு இருக்கிறது. அதேபோல் குன்னூர் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சி, திருவாரூர் சென்னை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விருதுநகர், தென்காசி மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் சார்பில் பல்வேறு கட்டடங்களும், அரசு
அலுவலர்களுக்கு குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள் என்று கூறினார், குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர்
உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், போன்றவற்றை திட்டங்களை தீட்டி சிறப்பானமுறையில் ஆட்சி செய்து வருகிறார்கள். எப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததோ, அப்படியே தமிழ்நாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்ட மதுரையில் ஏறு தழுவுதல் அரங்கம் மற்றும் கலைஞர் நூலகம், சென்னையில் கலைஞர் நினைவிடம் போன்றவை புதிய தொழில்நுட்பத்துடன் ஆயிரம் ஆண்டுகள் பொதுமக்கள் பார்த்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அரசு அலுவலர்களுக்கான 50 எண்கள் கொண்ட குடியிருப்புகள் கட்டடம் ரூ.11.86 கோடி
(ரூபாய் பதினோரு கோடியே என்பத்தாறு இலட்சம்) மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு
பெறப்பட்டு, 46 மிகவும் பழுதடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு அனைத்து
அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 குடியிருப்புகள் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளது.இதில் கொண்ட பி-பிரிவு கட்டடங்கள் எண்கள் தலா 1225 ,10
(ஆயிரத்து இருநூற்று இருபத்தைந்து) சதுர அடி பரப்பளவில் மூன்று
பகுதிகளாக (Block) பி-பிரிவு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு
குடியிருப்புகளிலும் வரண்டா (Verandah). லிவ்விங் ரூம் (Living Room). சமையலறை,
டைனிங் ஆல் (Dinning hall). குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கொண்ட
இரண்டு படுக்கை அறைகள். மூன்று கட்டம் (Three Phase) மின் இணைப்பு
வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. சி-பிரிவு கட்டடங்கள் 20 எண்கள் கொண்ட தலா
612 (அறுநூற்று பணிரெண்டு) சதுர அடி பரப்பளவில் நான்கு பகுதிகளாக (Block)
சி-பிரிவு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் லிவ்விங் ரூம் (Living Room), சமையலறை. டைனிங் ஆல் (Dinning Hall). இரண்டு படுக்கை அறைகள், குளியலறை, கழிப்பறை மற்றும் ஒரு கட்டம் (Single Phase) மின் இணைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.மேலும் டி-பிரிவு கட்டடங்கள் 20 எண்கள் கொண்ட தலா 578 (ஐநூற்று எழுத்தெட்டு) சதுர அடி பரப்பளவில் நான்கு பகுதிகளாக (Block) பிரிவு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் லிவ்விங் ரூம் (Living Room), சமையலறை, ஒரு படுக்கை அறை. குளியலறை. கழிப்பறை மற்றும் ஒரு கட்டம் (Single Phase) மின் இணைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.மொத்தம் 50 குடியிருப்புகளின் மொத்தப் பரப்பளவு ஆனது 36,575 சதுர அடி (முற்பத்து ஆராயிரத்து ஐநூற்று எழுபத்தைந்து) சதுர அடியில் மண்சரிவை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கபட்டு, அனைத்து குடியிருப்புகளுக்கும் அனுகு சாலை, தெரு விளக்கு கூடிய குடியிருப்பு கட்டங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது என மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :- நீலகிரி மாவட்டத்தில் பொதுவாக ஒரு அரசு பணியாளர் ஒரு இடத்தில் நல்ல முறையில் வேலை செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் இதர பொதுவான அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே, அவர் ஒரு தெளிவான மனநிலையில் வேலை செய்ய இயலும். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கி தருவது அரசின் கடமையாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலா இந்த அரசு கீழ் தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவருக்கும், சமமான திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலை மாவட்டமான நமது மாவட்டத்தில் அரசு பணியாளர்கள் தங்கி பணிபுரிய வேண்டும் என்றால், அவர்கள் வீட்டு வாடகை அதிகம் தர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்களின் ஊதியத்தில் வாடகை தொகையினை செலவு செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதனால், இங்கு பணிபுரியும் அரசு பணியாளர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பணியிடமாற்றம் மூலம் வேறு மாவட்டத்திற்கு சென்று விடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இம்மாவட்டத்தின் பொதுமக்கள் தான் இந் நிலை மாற வேண்டும் எனில் அரசு பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் அப்போதுதான் இந்த மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்கு அனைவரும்
உறுதுணையாக இருக்க முடியும் என்று கூறினார்,விழா தொடர்ச்சியாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் சுற்றுலாத்துறை அமைச்சர் ,நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில்,6 அரசு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.இவ்விழாவில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், பொதுபணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன் இ.ஆ.ப., ஆட்சித்தலைவர் .மு.அருணா இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்நிரராஜன், முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர்(பொதுப்பணித்துறை)கே.பி.சத்தியமூர்த்தி,
பொதுப்பணித்துறை காசிலிங்கம்,பொறியாளர்,பொதுப்பணித்துறை (கோவை மாவட்டம்) சத்திய வாகீஸ்வரன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் (உதகை) ரமேஷ் குமார், உதகை நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழந்தைசாமி, பிரகாஷ் அலுவலர்கள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0