நீலகிரி உதகை சேரிங் கிராஸ் பகுதி சாலையில் விபத்து அபாயம் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங் கிராஸ் பகுதி அதிக வாகனங்கள் செல்லும் இடம், மற்றும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் நடக்கக்கூடிய முக்கிய சாலையான பகுதி, உதகையின் முக்கிய வரவேற்பு சாலையான சிக்னல் அருகே யூகோ பேங்க் செல்லும் வழியில் பல மாதங்களாகவே பாதாள சாக்கடை பழுதடைந்து சீர்படுத்தாமல் உள்ளது, நடந்து செல்லும் பொழுதும் முதியவர்கள் குழந்தைகள் தடுக்கி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளை விபத்துக்கு உள்ளாக்கும் இந்த பாதாள சாக்கடை
சீர்படுத்தாமல் உள்ளதால் இதனை பலமுறை செய்தித்தாள்களிலும் வந்த பிறகும்
கண்டுகொள்ளாமல் இருக்கும் நகராட்சி மற்றும் போக்குவரத்து துறையை,பொதுமக்கள் கேட்டுக்கொள்வது இந்தப் பகுதியில் நகரம்  உறுப்பினர் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழியாக செல்லும் மக்கள் மற்றும் வாகனம் ஓட்டுபவர்கள் வேண்டுகோள்.