கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம், காரச்சேரியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 42) பா.ஜ.க. பிரமுகர் இவருக்கு ஸ்ரீதேவி ( வயது 41) என்ற மனைவியும்,ஒரு மகனும் ,ஒரு மகளும், உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் ( வயது 36 )என்பவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மாரிச் செல்வத்திற்கும் அதை ஒரு சேர்ந்த ராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ராமலிங்கம் அவர்களை தட்டி கேட்டதுடன் சமாதானம் செய்ய முயன்றார் .இதில் ஆத்திரம் அடைந்த மாரிச்செல்வம் மற்றும் அவரது சகோதரருமான ராம்குமார் ஆகியோர் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால்திட்டி கத்தியால் குத்தினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார்மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவர் சேர்க்கப்பட்டார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து மாரி செல்வம் அவரது தம்பி ராம்குமார் ஆகியோரை கைது செய்துவிசாரணை நடத்தி வந்தனர் .இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் சிகிச்சை பலனிக்காமல் நேற்று இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்கு மாற்றப்பட்டுள்ளது. சமரசம் செய்ய முயன்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0