கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்டணமில்லா மகளிர் இலவச பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து 115 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை நலத்திட்ட உதவிகளாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழக முதல்வரின் மகளிருக்கான இலவச பேருந்து என்ற மகத்தான திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் மகளிர்கள் பயனடைந்து வருகின்றனர் இந்நிலையில் மலைப் பகுதியான வால்பாறை மலைப்பகுதியில் இயங்கும் 37 பேருந்துகளில் 19 பேருந்துகள் மகளிருக்கான கட்டணமில்லா பயணமாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இதனால் மகளிர் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூபாய் தொள்ளாயிரம் ரூபாய் மிச்சப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது தற்போது வால்பாறை பகுதியில் சுமார் மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மகளிர் பேருந்துகளில் பயணம் செய்வதாக தெரிகிறது அது இத்திட்டத்தின் மூலம் வெகுவாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது , வால்பாறையில் இயங்கும் பழுதான பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகளை இயக்க அதற்க்கான நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டுவருகிறது தமிழக முதல்வரின் உத்தரவிற்கு இணங்க அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகைகளை விரைவில் வழங்க அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் போக்குவரத்துக்கழக பொதுமேலாளர்,மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார் மற்றும் அரசு அதிகாரிகளும், பயனாளிகளும், மாவட்ட துணை செயலாளர் ஈ.க.பொன்னுச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னால் நகர்மன்ற தலைவருமான கோழி கடை கணேசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜேபி ஆர் என்ற ஜே.பாஸ்கர்,மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்வி விஜயராஜன்,நகர துணைச்செயலாளர்கள் சரவணபாண்டியன், சூரியபிரபா, நகர் மன்ற உறுப்பினர்களும், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0