கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வால்பாறை அருகே உள்ள ஊசிமலை, வெள்ளமலை டாப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழுதான சாலையை சீரமைக்க சுமார் 13 கோடி மதிப்பில் புதிய தார்சாலை பணி தொடங்க அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதைத்தொடர்ந்து ஊசிமலை எஸ்டேட் மற்றும் வெள்ளமலை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜேபி ஆர் என்ற ஜே.பாஸ்கர், அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர்கள் அன்பரசன், ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது அதைத்தொடர்ந்து பொக்கலின் இயந்திரம் மூலம் பணி தொடங்கப்பட்டது இதனால் சுமார் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை முடிவுக்கு வந்த நிலையில் நிகழ்சியில் கலந்து கொண்ட எஸ்டேட் மேலாளர் பெருமாள் கிருஷ்ணன் , உதவி மேலாளர் செல்வராஜ், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணி, ஜே.மணிகண்டன், பால்சாமி, கவிதா,ஜெயந்தி உட்பட அனைவருக்கும் மேளவாத்தியம் முழங்க சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0