திருச்சிராப்பள்ளி பார்லிமென்ட் தொகுதிக்குட்பட்ட திருவரம்பூர் சட்டமன்றத்தை சார்ந்த துவாக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் பாராளுமன்ற இணை அமைப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் RG.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 12 மருத்துவர்கள் 3 செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியுடன் நடத்தப்பட்ட இம்மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் டானிக் வகைகள் மற்றும் பிசியோதெரபி கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. உள்நோயாளியாக மருத்துவமணையில் தங்கி அவசரசிகிச்சை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்த பயனாளிகள் 8 பேரை கண்டறிந்த டாக்டர் RG.ஆனந்த் தனது சொந்த செலவில் அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பாரதிய ஜனதா கட்சியின் புதுமையான இந்த அணுகுமுறையை அப்பகுதி மக்கள் மிகவும் வெகுவாக வரவேற்று பாராட்டினர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0