திருவனந்தபுரம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேரளாவில் 16 இடங்களில் போட்டியிட உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு உள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஒருபுறமும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மறுபுறமும் இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன.கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் இன்று, ‘கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான போட்டியில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். தவிர கூட்டணியில் 2-வது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்களும், கே.சி.ஜே. (ஜே.) மற்றும் ஆர்.எஸ்.பி. ஆகிய இரு கட்சிகளுக்கு தலா 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்துள்ளார் இம்முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சமீபத்தில், இந்த முறை தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டுப் பெறுவோம் இந்த முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்றும் தெரிவித்து இருந்தது. ஆயினும் இந்த விவகாரம் ஆலோசனை நடத்தித் தீர்க்கப்பட்டு விட்டது என சதீசன் கூறி உள்ளார். இன்று செய்தியாள்ளர்களிடம் ம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பழம்பெரும் தலைவரான முகமது பஷீர் மலப்புரம் தொகுதியில் இருந்தும், மக்களவை எம்.பி.யாக பதவி வகித்து வரும் அப்துல் சமது சமதனி பொன்னானி தொகுதியில் இருந்தும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரான பாலக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கல், கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0