இலங்கையில் கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் பாஜக அரசை கண்டித்து நீலகிரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அகில இந்திய காங்கிரஸ் மாநில தலைவர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஐந்து மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்து ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை கண்டுகொள்ளாமல் இருக்கும் பாஜக அரசை கண்டித்து உதகை ஏடிசி திடலில் நீலகிரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் எல். கணேசன் தலைமையில், முன்னிலை மாநில பொதுச் செயலாளர் நாகராஜ், கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் துவங்கியது, ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ், கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் பல முறை கைது செய்து வருவதோடு, தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் படகுகளையும் நாசம் செய்வதோடு மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று கைது செய்து பல துன்புறுத்தலுக்கு ஆளாகும் மீனவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி மீனவர்களை மீட்டு தர வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளதால் மீனவர்கள் குடும்பத்தினர் கண்ணீருடன் ஒவ்வொரு நாளும் மீன் பிடிக்கும் தொழிலை இழக்கும் அபாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், இதைத்தொடர்ந்து தற்போது ஐந்து மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது, இதனை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை உதவிகளை செய்கிறோம் என்று பாஜக அரசு பொய் சொல்லி வருகிறதை கண்டித்து தமிழகம் முழுதும் காங்கிரஸ் ஆர் பாட்டம் செய்வதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திலும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ரகு சுபாஷ், மாவட்டத் துணைத் தலைவர் காந்தல் நாகராஜ், கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ் எம் ரபிக், மாநில பொது செயலாளர் லாரன்ஸ்,
உதகை ரவிக்குமார், உதகை நகரத் தலைவர் நித்திய சத்தியா, குன்னூர் நகர தலைவர் ஆனந்த், கோத்தகிரி வட்டாரத் தலைவர் சின்ன பாபு, குன்னூர் வட்டார தலைவர் சுப்பிரமணி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மனிஷ் சந்திரன், , சிறுபான்மையினர் பிரிவு ஜாகீர், ஊடகப்பிரிவு பாபு, மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் அபிமன்னா இத்தனார் சுரேஷ்,மகளிர் அணியின் துணைத் தலைவர் பிரேமா, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், சுதாகர், நாகராஜ், மஞ்சூர் பஞ்சாயத்து தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் நேரு, மாவட்ட இளைஞரணி ராஜேஷ்,இளைஞர் அணி மாவட்ட தலைவர் எ ராஜேஷ், காங்கிரஸ் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாம், இம்மானுவேல் யூத் காங்கிரஸ் தொகுதிஒருங்கிணைப்பாளர்,மற்றும் மகளிர் அணியினர், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, இலங்கையில் தமிழக மீனவர்களை கைது செய்ததை கண்டுகொள்ளாமல் இருக்கும் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர், மற்றும்
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள போராட்டத்தை தடி அடி நடத்தாமல் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பதில் அளிக்க வேண்டும் என்று நீலகிரி காங்கிரஸ் கமிட்டி சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர், மற்றும் பத்திரிகையாளர்களின் பேட்டின் போது மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் கூறியதாவது நீலகிரி மாவட்டத்திற்காக உதகை சட்டமன்ற உறுப்பினர் எல். கணேசன் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீலகிரி தேயிலை விவசாயிகளின் பல ஆண்டுகளாக உரிய மானியம் கிடைக்காததை எடுத்துக் கூறி விவரித்ததில் பேரிலும் தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சென்று சந்தித்து நீலகிரி தேயிலை விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லி ஏற்ற மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்ததன் பேரில் உதகை எம்.எல்.ஏ அவர்களின் அன்பு கோரிக்கைகளை ஏற்று நீலகிரி விவசாயிகள் மீது அக்கறை உள்ள தமிழக முதலமைச்சரவர்கள் தற்போது நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு மானியம் இரண்டு ரூபாய் வழங்கி உள்ளார், இதற்கு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும் நீலகிரி மக்கள் சார்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம் என்று கூறினார்.