கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்.

கோவை கவுண்டம்பாளையம், மாணிக்கம் விதியை சேர்ந்தவர் துரை. இவரது மகள் யோக வர்தனி ( வயது 21)புலிய குளத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை துரை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.