ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு அடிக்கல் நாடினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா நேரில் பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார். உடன் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக மண்டல மேலாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.