இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி திமுகவின் திண்ணை பிரச்சாரம் துவக்கம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் திண்ணை பிரச்சாரம் நடத்திட வேண்டும் என கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்டம் உதகை நகரத்திற்கு உட்பட்ட 20, 21 மற்றும் 22 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட ஜோசப் தெரு, மெயின் பஜார், அப்பர் பஜார், வில்லோபவுண்டு, புட்சர் தெரு பகுதிகளில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் மாவட்ட துணை செயலாளரும், உதகை நகரமன்ற துணை தலைவருமான ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, மெல்ரோஸ் செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், உதகை நகர துணை செயலாளர் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளையும், இந்தாண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளையும் பொதுமக்கள் மத்தியில் விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. திண்ணை பிரச்சாரத்தின்போது, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வெங்கடேஷ், பாபு, பரமேஸ்வரி, ஜெயராமன், மத்தீன், நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் மார்கெட் ரவி, மத்தீன், ரியாஸ், தியாகு உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.