கலப்பட மதுபானம் தயாரித்த கேரளா வாலிபர் மீதுகுண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த‌ கேரளா மாநிலத்தை சேர்ந்த உன்னி மகன் அகில்(30) என்பவன கடந்த 01.01.2024 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். .மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட அகில்(30) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்கிராந்தி குமார் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்த வழக்கு குற்றவாளியான அகில் (வயது 30) குண்டர் தடுப்பு [சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு] சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது காரமடை அருகே கலப்படமது தயாரித்ததாக இதுவரை 11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.