திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.

மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் விளையாட்டுப் பட்டிமன்றம் கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுபோட்டிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரத்தின் சார்பில் 89 வது விழாவாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டமாக நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்திற்கு வட்டக் கழகச் செயலாளர் இளங்கோ மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் உதயகுமார் மாநகர தொண்டரணி அமைப்பாளர் தினகரன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மோகன் தலைமை வகித்தார் மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழக பள்ளித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்ட செயலாளருமான
கே ஆர் பெரிய கருப்பன், திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மண்டலம் 3ன் தலைவருமான மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
பொதுக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது
திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தவுடன் உடனடியாக எங்கள் அழைப்பை ஏற்று வருகை புரிந்து இருக்கும் சிவகங்கை மாவட்ட செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அண்ணன் பெரிய கருப்பன் அவர்களை வரவேற்பதாகவும் மேலும் கலைஞர் அவர்களின் உடன்பிறவா சகோதரனாக அவருடன் பயணித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் பெரிய கருப்பன் என்றும்
மேலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய ஒரே தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் என்றும்
மேலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் நாயகர் தமிழக முதல்வர் அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நடத்தி அவ்வாறு நடத்தப்படும் கூட்டமானது மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்ததாகவும்
மேலும் இந்த ஆட்சியானது மகளிருக்கான ஆட்சி என்றும், கலைஞர் உரிமைத்தெகையாகட்டும் ,மேலும் முதல் முதன்முதலில் பொறுப்பேற்றவுடன் கோட்டைக்கு சென்று மகளிருக்கு இலவச பேருந்து என்ற கோப்பில் கையெழுத்துயிட்டதாகட்டும்
மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்ததாக இருந்தாலும்,
அது தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி தான் என்றும் எனவே ஒரு மாநிலம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஒன்றியத்தில் ஆளும் அரசாங்கமும் மாநில அரசாங்கமும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக செய்து கொடுத்திட முடியும் என்றும் ,ஆனால் மத்தியிலாலும் பாசிச பாஜக ஆட்சியானது நமது மாநில அரசிற்கு ஒரு வருடத்திற்கு வரவேண்டிய ரூபாய் 20 ஆயிரம்கோடியை நிறுத்தி வைத்துள்ளது.
எனவே தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் மக்களை வேதனையில் ஆழ்த்தி வரும் பாசிச பாஜக ஆட்சியை அகற்றி திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டுமென எடுத்துரைத்தார்
மேலும் இந்த தேர்தல் ஆனது நாட்டை காக்கும் தேர்தல் என்றும் எனவே 40 தொகுதிகளிலும் நமது திமுக கூட்டணி வெற்றி பெற மக்களிடம் சொல்வோம் வெல்வோம் என எடுத்துரைத்தார்
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் நன்றியுரை மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்து தீபக் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சிந்துஜா ஆகியோர் ஆற்றினர் மேலும் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன் சேகரன் துணை மேயர் திவ்யா மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு சந்திரமோகன் நூர்கான் சரோஜினி மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ் நீலமேகம் ராஜ்முகம்மது மணிவேல் விஜயகுமார் பாபு சிவக்குமார் மற்றும் மாவட்ட நகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.