தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது.
இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு மார்ச்.4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே,தமிழகத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும்,மறைமுகத் தேர்தலில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர்நீதிமன்ற கிளையை அணுகலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.