திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் அருகே நடந்தது திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார் போராட்ட நாயகன் சமூக சேவகர் துணைத் தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட அரசு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதியம் பொது விநியோகத் திட்டத்திற்கு த னித் துறை குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 10 ஆயிரம் ஈட்டிய விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் அங்கமுத்து மாவட்ட மகளிர் அணி தலைவி பள்ளிப்பட்டு லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்வா சாவா என்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம் என்றும் எங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வயிற்றில் பாலை வார்த்து எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தாருங்கள் என பலத்த கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0