திருச்சியில் பெரும் பிடுகு முத்தரையர் மணிமண்டபம் சர் ஏ டி பன்னீர்செல்வம் மணிமண்டபம் நடிகர் இசையமைப்பாளருமான தியாகராஜ பாகவதர் மணி மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக வருகிற பிப்ரவரி 27-ல் திறந்து வைக்க உள்ளாா்.
தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை ஆட்சி செய்த பேரரசா் பெரும்பிடு முத்தரையா், நீதிக்கட்சி தலைவா்களின் ஒருவரான சா் ஏ.டி. பன்னீா்செல்வம், இசைக்கலைஞரும், திரைப்பட நடிகருமான எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபங்கள் கட்டும் பணி ரூ. 1 கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் ஒதுக்கீட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. பெரும்பிடுகு முத்தரையா் மணிமண்டபம் 2,400 சதுர அடியில் ரூ.99.25 லட்சத்திலும், சா் ஏ.டி. பன்னீா் செல்வம் மணிமண்டபம் ரூ.43.40 லட்சத்திலும், தியாகராஜ பாகவதா் மணிமண்டபம் ரூ.42.69 லட்சத்திலும் தலா 1,722 சதுர அடி பரப்பிலும் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் கிரானைட் கற்கள் பதித்து, நாலாபுறமும் நுழைவு வாயில் அமைத்து, வெளிப்புற அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுஇங்கு, பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. பெரும்பிடு முத்தரையா் மணிமண்டபத்தில் கூடுதலாக நூலகமும் இடம் பெறுகிறது. நூலகத்துக்கான உள்கட்டமைப்புகள், மண்டபத்தில் உள்கட்டமைப்புகளில் அழகிய வேலைப்பாடுகள் ஆகிய பணிகள் முடிவடைந்து முழுவதும் வா்ணம் பூசப்பட்டுள்ளது. இதேபோல, மணிமண்டப கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இந்த 3 மணிமண்டபங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வரும் 27ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளாா்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0