நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பாக நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பள்ளிகளில் இருந்து வருவதற்கு மேலான மாணவர்களுக்கு மூன்று நாள் இயற்கை பாதுகாப்பை குறித்த கல்வி ,வனவியல் களப்பயணம் தொடங்கியது.
நிகழ்ச்சியினை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து பேசி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வினை தலைமை தாங்கி களப்பயணத்தை தொடங்கி வைத்த மாவட்ட வன அலுவலர் எஸ் கௌதம் அவர்கள் மாணவர்களிடம் பேசுகையில் சமூகத்தில் சிறந்த சேவை செய்ய கல்விதான் முக்கியம் எந்த துறையிலும் ஆர்வத்துடன் கல்வி பயின்றால் வெற்றியை நிச்சயம் மாணவர்கள் எதிர்காலத்தில் இயற்கை பாதுகாப்பின் நம்பிக்கை என குறிப்பிட்டார். சி பி ஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமார வேலு கருத்தாளராக கலந்து கொண்டு பேசுகையில் நீலகிரி உயிர்ச்சூழல் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு முக்கியம். சேவை மனப்பான்மை கொண்ட இளைய சமூகம் இயற்கை பாதுகாப்பதில் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பறவைகள் விலங்குகள் எவ்வாறு வனங்களை அழியாமல் பாதுகாக்க உதவி வருகின்றது
என்பதனை மாணவர்களுக்கு விளக்கி கூறினார். கேன்ஹில் காப்பு காட்டிற்கு அழைத்து சென்று தாவரங்கள்,விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.
இந்நிகழ்வின் ஏற்பாட்டினை தேசிய பசுமை படை நீலகிரி மாவட்டம் செய்திருந்தது நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், வனத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது . விழா நிறைவாக வந்த அனைவருக்கும் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0