திருச்சி வார்டு பகுதிகளில் மேயர் ஆய்வு.!!

திருச்சி 51-வது வார்டுக்கு உட்பட்ட பீமநகர் மேம்பாலம் கீழ் உள்ள மாநகராட்சி காய்கறி மார்க்கெட் கடைகள் கட்டும் பணியை பார்வையிட்டு அங்கு தண்ணீர் செல்லும் பாதை மற்றும் சாக்கடை கட்டுவது பற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். வார்டில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் 51-வது 52 வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்கவும் வார்டுக்குள் சாலை போடாத பகுதியில் உடனடியாக சாலை போடுவதற்கு ஆணையிட்டார். பீமநகர் மேம்பாலம் ஏறும் பகுதியில் சாலை குண்டும் குளியுமாக மூலமாக காட்சியளித்ததை கண்ட மேயர் உடனடியாக சரி செய்து செப்பனிட்டு போக்குவரத்து சீராகச் செல்ல நடவடிக்கை எடுத்த மேயரை பொதுமக்கள் பாராட்டினர். நிகழ்வில் கோட்டத் தலைவர் துர்கா தேவி எம் சி மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் பொன்மலை கோட்டஉதவி ஆணையர் சண்முகம் உதவி பொறியாளர் பாவா பக்ருதீன் 51 வது வார்டு உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..