கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேற்று சூளேஸ்வரன்பட்டி நட்டுக்கல் பாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 27 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இதை கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ( வயது 47) கைது செய்யப்பட்டார்.
இதேபோல சூலூர் காங்கேயம் பாளையம் பகுதியில்சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சூலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் அவரிடம் 1கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ,ஆவரான் குடியைச் சேர்ந்த சேவுகபெருமாள் (வயது 40) கைது செய்யப்பட்டார்.. மேலும் விசாரணை நடந்து வருகிறது..