திருச்சி எஸ்.டி. ஏ பள்ளியில் மருத்துவ முகாம்..!

திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் எஸ் டி ஏ பள்ளி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திருச்சி பீமநகர் எஸ் டி ஏ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில் இருதயம் சிறுநீரகம் கல்லீரல் மற்றும் பொது மருத்துவத்திற்கான இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன மேலும் இசிஜி எக்கோ வயிற்று பகுதி ஸ்கேன் முற்றிலும் இலவசமாக பார்க்கப்பட்டது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பாக இருதய சிகிச்சை தலைமை மருத்துவர் கணேஷ் இருதய பொது மருத்துவர் பிரகாஷ் மற்றும் சிறுநீரகவியல் சிகிச்சை தலைமை மருத்துவர் செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களின் உடல்நல பிரச்சனைகளை கேட்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர் இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பாக ரமேஷ் மற்றும் எஸ்.டி .ஏ மேல்நிலைப்பள்ளி முதல்வர் விஜயகுமார் ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ உதவிகளை பெற்றனர்.