வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே மத்திய நுண்ணறிவு போலீசார் மாறு வேடத்தில் கண்காணித்தனர். அப்போது ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். அவனைப் பிடித்து விசாரிக்கையில் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஹே மந்த் குமார் வயது 31 என்றும் தான் விற்பனை செய்யும் கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வந்ததாகவும் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் இதை பயன்படுத்தி பாருங்கள் சொர்க்கத்தில் பறக்கலாம் என்று கூறியுள்ளான். மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஹேமந்த் குமார் வீட்டை சோதனை இடுகையில் 12 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர் அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாரிடம் அவனை ஒப்படைத்தனர் .அமைந்தகரை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீஸ் படையினர் திரு வி க நகர் பூங்காவில் மாறுவேடத்தில் சுற்றி சுற்றி வந்தனர். அங்கு ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதை மடக்கிப்பிடித்து கைது செய்தனர் அவன் அமைந்தகரை செனாய் நகர் கஜலட்சுமி காலனியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி பாபா பிரகாஷ் வயது 20 என்பது தெரிய வந்தது . இவன் மீது ஏற்கனவே அமைந்தகரை காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது . அவனிடமிருந்து 11/2 கிலோ கஞ்சா இருந்தது அதை கைப்பற்றினர். அவனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0