ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம் யூ தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும். 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றம் செய்ததை கண்டித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தைச் சோந்த ரயில்வே ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளா் எஸ். வீரசேகரன் தலைமை வகித்தாா். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே தொழிலாளா்கள் பேரணியாக வந்து ரயில்வே பணிமனை வாயிலில் கூடி, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். இந்தப் போராட்டத்தால் ரயில்வே பணிமனையில் பணிகள் பாதிக்கப்பட்டன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0