கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெறவும், பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் இருபத்தாராயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மோட்டார் வாகனச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎஃப் சங்க பொதுச்செயலாளர் வி.பி.வினோத்குமார் தலைமையில் சங்கத்தலைவர் சௌந்திரபாண்டியன், ஐஎன்டியூசி யூ.கருப்பையா, ஏஐடியுசி மோகன்,எல்.எல்.எஃப் கேசவமருகன், சிஐடியு பரமசிவம், ஹெச்.எம்.எஸ் சிவசுப்பிரமணியம் மற்றும் எஸ்.கே.எம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர் அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 54 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வால்பாறை நகராட்சி திருமண்டபத்தில் அடைத்தனர் இந்த மறியல் போராட்டத்தால் வால்பாறை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0