நீலகிரி கால்வாயில் கொட்டப்படும் வீட்டு உபயோக குப்பைகளால் தூய்மையாக்கும் பகுதி கேள்விக்குறியாகி உள்ளது?

நீலகிரி மாவட்டம் உதகை 18 ஆம் வார்டு பாம்பேகேசில் சாலையில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவில் அருகே உள்ள மழைநீர் கால்வாயில் வீட்டு உபயோக குப்பைகள் கொட்டுவதால் குப்பைகள் தேங்கி மழைக்காலங்களில்
இயற்கையாகவே கால்வாயில் செல்லக்கூடிய மழைநீர் அடைப்படுவதோடு
சாலைகள் சீறுகெட்டு போவதை பகுதி மக்கள் அறிய வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நகர மன்ற உறுப்பினரும் மக்களின் அனைத்து விருப்பங்களையும் உடனடியாக செய்து தர மனம் இருக்கும் என்பதை நம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நீலகிரி உதகை 18 ஆவது வார்டு அனைத்து பணிகளும் உடனடியாக செய்து சீரும் சிறப்புமாக இருக்கும் நிலையில் மக்களின் ஒத்துழைப்பு அதிகமாக தேவை என்றார்.
அந்த பகுதிகள் தூய்மை குறைவாய் காணப்பட்டதால் பகுதி 18 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா நேரில் பார்வையிட்டு நகராட்சி மேஸ்திரி மனோகரன் மேற்பார்வையில்… நகராட்சி தூய்மைப்பணி பணியாளர்கள் ராஜா.. வாசு.. ரவி.. .ரஞ்சித்… ஆகியோர் இணைந்து கொட்டிக்கிடந்த மண் மற்றும் மேல்புர வீடுகளில் இருந்து கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளையும் குளிர் என்றும் பாராமல் காலையில் துவங்கி சிறப்பாக அகற்றி முடித்தனர் நகராட்சிக்கு நன்றி தெரிவித்தார் நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா..