பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பக்கம் உள்ள அண்ணா காலனியில் வசிக்கும்,தண்டபாணி என்பவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மகாலிங்கபுரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக பொள்ளாச்சி தாட்கோ காலனியை சேர்ந்த செல்வராஜ் ( வயது 26) ஆச்சி பட்டி கிரி பிரசாத் (வயது 23) அண்ணா காலனி திலீப் குமார் (வயது 32) அர்ஜுன் குமார் (வயது 25) ராஜேஷ் ( வயது 24) ஆச்சி பட்டி வெற்றிவேல் ( வயது 32) அண்ணா காலனி மாரிமுத்து (வயது 39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 10 ஆயிரத்து 310 பறிமுதல் செய்யப்பட்டது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0