திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் மற்றும் பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு குப்பை அள்ளும் வாகனம் வேண்டுமென ஒன்றிய குழு தலைவர்கள் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதை ரமணர் ஆசிரமம் எதிரே வெம்பாக்கம் மற்றும் பெரணமல்லூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கு தனியார் வங்கி மூலம் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள குப்பை அள்ளும் ஈப்பு வாகனங்களை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஒன்றிய குழு தலைவரிடம் வழங்கினார்.
மேலும் வெம்பாக்கம் மற்றும் பெரணமல்லூர் ஆகிய இரண்டு யூனியன் சேர்மன்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இரண்டு புதிய ஸ்கார்பியோ கார்களையும் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.