நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…
தாய் அல்லது தந்தை இழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கௌரவித்த பள்ளி
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட சோலடா கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்,இந்தப் பள்ளியின் 29வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவில் பள்ளியில் பயிலும் மாணவர்களை அரசு பள்ளிக்கு அனுப்பி வரும் பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா ஏற்பாட்டில் வட்டார கல்வி அலுவலர் நந்தினி தலைமையில் கௌரவிக்கப்பட்டனர். தாய் அல்லது தந்தை இழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கி அவர்களை ஊக்குவித்தனர். மேலும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்கள் ஆங்கில வழி கல்வி பயிலும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட 2.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளை பள்ளிக்கு செய்தனர். மேலும் இந்த பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி சீருடை மற்றும் விளையாட்டு சீருடை, பரிசுப் பொருட்கள் வழங்கியும் ஊக்கப்படுத்தினர்,
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சந்தோஷ், தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்,