கோவை பிப் 5 கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம், காந்தி வீதியைச் சேர்ந்தவர்பண்ணாரி. இவரது மனைவி கவுசல்யா ( வயது 35) டெய்லர். இவர் கடந்த 6மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது அந்த கோவிலில் பூசாரியாக வேலை பார்க்க வரும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ( வயது 41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது..பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். இ து அவரது கணவருக்கு தெரிய வந்தது ,இதை கணவர் கண்டித்தார்.அதிலிருந்து அந்த பூசாரியிடம் பேசுவதை கவுசல்யா நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி ராமகிருஷ்ணன் கவுசல்யா அங்குள்ள கோவில் அருகில் நடந்து செல்லும் போது வழி மறித்து தாக்கினாராம்.கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது..இதனால் மனமுடைந்த கவுசல்யா சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார் .அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் .இது குறித்து கவுசல்யா துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பூசாரி ராமகிருஷ்ணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 4 பிரிவினை வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0