கோவையைஅடுத்த மதுக்கரை பக்கம் உள்ள சீராபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சொண்டி ராஜேந்திரன் (வயது 38 )கூலி தொழிலாளி. இவர் கடந்த 20 21 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியைஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மதுக்கரை போலீசாரால் போக் சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன் விசாரணை நடத்தி சாட்சிகளை சிறந்த முறையில் ஆஜரப்படுத்திய ஏட்டு ஆனந்தகுமாரைபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0