திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் நிற்கலாமா,வேண்டாமா என்பதை திருச்சியில் தான் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக ஆட்சியை பிடித்தது ஆகையால் திருச்சி எப்போதுமே திமுகவிற்கு திருப்புமுனையாக அமையும் என்பதில் அனைவரும் நம்பிக்கையுடன் இருகிறார்கள். தற்போது திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என இரண்டு பேரும் மக்கள் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 9 சட்டமன்ற தொகுதியையும் முழுமையாக திமுக கைப்பற்றி திருச்சியை தனது கோட்டையாக மாற்றி உள்ளது. இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40-40 என்ற இலக்கை நோக்கி திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும், பெயர்களையும் அறிவிக்க உள்ளனர். குறிப்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின், மகன் அருண் நேரு இந்த தேர்தலில் திருச்சி அல்லது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆகையால் கடந்த சில மாதங்களாக அருண் நேரு மக்கள் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் திருச்சியில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என் அருண் நேரு ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார் அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தங்கள் ஏரியாவில் பாதாள சாக்கடை மற்றும் ரோடு அமைத்து தர வேண்டுமென கே.என் அருண் நேரு விடம் கோரிக்கையை வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக மாநகராட்சி மேயர் அன்பழகனை நேரில் சந்தித்து மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அருண் நேரு கோரிக்கையை முன் வைத்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அந்த பகுதியில் பாதாள சாக்கடை சரி செய்யும் பணியும், சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்..எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் சாலை அமைத்து தர வேண்டி அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு விடம் கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் பாதாள சாக்கடை மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தற்போது பாதி பணிகள் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்து விடும் எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் அருண் நேரு அவர்களுக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். திருச்சி மக்களின் கோரிக்கையை உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0