நீலகிரி மாவட்ட கோத்தகிரி எல்லைக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிடிபட்டன …

நீலகிரி மாவட்ட கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு சில கடைகளில் விற்பனை செய்வதாக தனிப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தரப்பிரிவு காவலர் சுரேந்தர் ஆகியோர் கிடைத்த தகவலை உறுதி செய்து, குன்னூர் குற்றப்பிரிவு காவலர்களுடன் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் சோதனை மேற்கொண்டார்கள், என் எஸ் ஜே என்ற மளிகை கடையை சோதனை செய்தபோது அங்கிருந்து சுமார் 150 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது இதன் மொத்த மதிப்பு 2 லட்சத்து 37 ஆயிரம் என மதிப்பிடப்படுகிறது, கடையின் உரிமையாளர் ஜெயசிம்மன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன, மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன,.