மின் வாரியம் : தமிழகத்தில் 25% கூடுதல் மின்கட்டணம்…

சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு ஜூன் மாதத்திற்கு பிறகு மின் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பொதுவாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை அரசு மாற்றியமைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

எம் எஸ் எம் இ என்று அழைக்கப்படும் இந்த சிறு குறு தொழில் நிறுவனங்களில் அதிக அளவில் மின்சாரம் பயன்பாடு இருந்து வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது . இதனால் இந்த நிறுவனங்களை ஜூன் மாதத்திற்கு பிறகு எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஸ்மார்ட் மின் மீட்டராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டும் கூடுதலாக 25 சதவீதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.