நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கோவையில் உதவி போலீஸ் கமிஷனர்களும் துணை சூப் பிரண்டுகளும், திடீர்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை சாய்பாபா காலனி சரக போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன் .இவர் நெல்லை மாநகர குற்ற ஆவண பதிவேடுகள் பிரிவிற்கு உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் குணசேகரன் திருப்பூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், கோவை மாநகர நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் திருச்சி மாநகர போலீஸ் உதவி கமிஷனராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணைபோலீஸ்சூப்பிரண்டு ஜனனிபிரியா கோவை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவுதுணை போலீ சூப்பிரண்டாகவும், கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை திருப்பூர் மாநகர உதவி போலீஸ் கமிஷனராகவும், கோவை மாவட்ட குற்ற ஆவண பதிவேடு துணைபோலீஸ் சூப்பிரண்டு வெற்றி செல்வன், பேரூர் சப்-டிவிசன் போலீஸ் துணை சூப்பிரண்டாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல திருப்பூர் உதவி கமிஷனர் சந்திரசேகரன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்காத்திருப்போர் பட்டியலில் இருந்த துணை சூப்பிரண்டு மனோகரன் கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், திருப்பூர் மாநகர குற்ற ஆவணபிரிவு உதவி கமிஷனர் ராஜன் கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் நேற்று 99 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0