உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முதல்வருக்கு கடிதம்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் நளினி தவிர்த்து மற்ற நால்வரும் திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கணவர் முருகனை அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். முருகன் எழுதியுள்ள கடிதம் இந்த வழக்கில், இதுதொடர்பாக பதிலளித்த மத்திய அரசு, சிறப்பு முகாமில் உள்ள நால்வரையும், இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்தது. இதையடுத்து, முருகன் உட்பட மற்ற மூவரும் தொடர்ந்து சிறப்பு முகாமிலேயே உள்ளனர்.
இந்நிலையில், முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முருகன் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 32 வருட சிறை வாசத்திற்கு பிறகு தற்போது விடுதலை ஆகியுள்ளேன். பல மாதங்களாக என் குடும்பத்துடன் இணைந்து வாழ அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எனது கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார். மேலும், சிறைவாசத்தை விட சிறப்பு முகாமில் இருப்பது கொடுமையாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் வாழ்க்கையில் கடும் துயருடன் இருப்பதாகவும், அன்றாடம் அனுபவிக்கும் கொடுமைகளை விட, இறப்பதே மேல் என்பதால், இன்று முதல் உண்ணாவிரதம் தொடங்குவதாகவும் அவர் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
ராபர்ட் பயஸ் எழுதியுள்ள கடிதத்தில் அதேபோல், திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் ராபர்ட் பயஸ் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தாம் உட்பட சாந்தன், முருகன், ஜெயக்குமாரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை கோரி பயஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு ஆனபோதும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை என ஆட்சியர் மூலம் முதல்வருக்கு பயஸ் மனு அனுப்பினார் அதனால் நாங்கள் உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் என மனம் நொந்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.