வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், ஏரிக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிய நீதிக்கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, வேலூர் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை வருகையின் போது செய்ய உள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. உடன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மூர்த்தி, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகேந்திரன், மாவட்ட ஏசிஎஸ் பேரவை செயலாளர் மாயா.சிவா, மாவட்ட அம்பேத்கர் பேரவை செயலாளர் நத்தம் நாகராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் இராம.இளங்கோ மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0