சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்புச் சங்க நிர்வாகிகள் சார்பில் குடியரசு தின விழா…

நீலகிரி மாவட்ட உதகையில் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் S. முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி மாவட்ட தலைவர் B.R வினோத் தலைமையில் உதகை லோயர் பஜார் டவுன் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஓபார்ட் பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
நிகழ்ச்சி துவங்கும் முன்னதாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு விழா தொடங்கியது, நிகழ்ச்சியை தொடர்ந்து நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க சார்பில் அனைத்து நிர்வாகிகளும் இணைந்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர், பள்ளி மாணவ மாணவிகள் தேசிய கீதம் பாடல் பாடி தேசபக்தி மரியாதையை வெளிப்படுத்தினர், கொடியேற்றத்துடன் விழா  சிறப்பிக்கப்பட்டது, விழா நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார், ஆசிரியர்கள் , மாணவர்கள், மற்றும் சங்க நிர்வாகிகள் சார்லஸ், ஷாநவாஸ், ரஃபேல், சர்தார், ஜான், சதீஷ், ஜார்ஜ், சையத் இப்ராஹிம், சிஜூ, வசந்தா, தனலட்சுமி, பிரியா, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர், மாவட்ட சுற்றுச்சூழல் துறை தலைவர் சார்லஸ் அனைவரையும் வரவேற்று குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார், விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளாக நோட்டு புத்தகம், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ், வழங்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை ஆர்வமிக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வினோத், குடியரசு தின விழாவின் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியில் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், சார்லஸ், மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். ஒபர்ட் பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்புரையில் பேசியதாவது பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருட்களுக்கு அடிமை ஆகாமல் இருக்க விழிப்புணர்வு தேவை, அவர்களை பாதுகாக்க வேண்டும், தமிழ் தாய் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினார், விழாவில் சிறப்பு விருந்தினராக அப்பகுதி நகர மன்ற உறுப்பினர் திருமதி கத்திஜா கலந்து கொண்டு 75வது குடியரசு தின விழாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார், நிகழ்சி நிறைவில் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது, விழா நிறைவாக மாவட்ட தலைவர் வினோத் அனைவருக்கும் நன்றி கூறினார், தேசிய கீதம் பாடலுடன் விழா நிறைவு பெற்றது .