ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக சதி!!!..

டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக சதி செய்து வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 7 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.25 கோடி வரை பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றம்சாட்டியிருக்கிறார். கடந்த 9 ஆண்டாகவே ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்கு பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.