ஸ்ரீ ஜெய மாருதி தேக பயிற்சி சாலைக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பளுதூக்கும் உபகரணம்…

சூலூர் பேரூராட்சிக்குப் பட்ட பொன்விழா கலையரங்கத்தில் அமைந்துள்ள 60 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றஸ்ரீ ஜெய மாருதி தேக பயிற்சி சாலைக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பளுதூக்கும் விளையாட்டு உபகரணம் எல்லிகோ வெயிட் லிப்டிங்செட் கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் பி .ஆர். நடராஜன் வழங்கினார். சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த. மன்னவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பழுதூக்கும் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் வரவேற்பு உரையாற்றினார். சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், சூலூர் நீர்நிலைகள் அறக்கட்டளை இனிதாகுமார், ஜெய மாருதி தேக்கப்பற்சித்தலை தலைவர் பொன் கந்தசாமி, பொருளாளர்EX நேவி பாஸ்கர் ,துணைத் தலைவர் சிலம்பு பயிற்சியாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் செல்வராஜ், சூலூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் வடிவேல், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சூ .பே. கருணாநிதி, பசுமை நிழல் விஜயகுமார், வேலுச்சாமி , மற்றும் சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், சூலூர் நகர செயலாளர் ராயப்பன், பொங்கல் விழா விளையாட்டு குழு தலைவர் அரிமா சுந்தர்ராஜ், பொருளாளர் லோகநாதன், பசுமை நிழல் சுந்தர்ராஜ், சூலூர் தாலுகா குழு உறுப்பினர் ரவீந்திரன், சர்வதேச பெஞ்ச் பிரஸ் பழுதூக்கும் வீரர் தமிழ்நாடு காவல்துறை விஜயகுமார் ,பெஸ்ட் பேக்கரி அய்யாசாமி, பயிற்சிசாலை தண்டபாணி, சிலம்பு பயிற்சியாளர் சண்முகசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக கல்வெட்டினை திறந்து வைத்து வெயிட் லிப்டிங் உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை கோவை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தொடர்ந்து விளையாட்டு திறனை மேம்படுத்துவதில் சிறப்புடன் செயல்பட்டு வரும் பயிற்சி சாலையை பாராட்டியும் சூலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நாடாளுமன்ற நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகள் சூலூர் பேருந்து பணிமனை 20 லட்சம் மதிப்பீட்டில் துவக்கி வைத்ததாகவும் தெரிவித்தார் இறுதியாக பயிற்சி சாலையின் செயலாளர் காவல்துறை சதீஷ் அவர்கள் நன்றி கூறினார்.