பொள்ளாச்சியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் , டெய்லர் இவரது மகன் அஸ்வஜித் (வயது 14) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். நேற்று அம்பராம்பாளையம் ஆற்றுக்கு தனது நண்பர் கார்த்திக்குடன் குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தந்தை விஜயகுமார் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0